Thursday, January 13, 2022

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஹைகூ கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்...

முதல் பரிசு - ரூ.1500/-
தோழியர் தனலட்சுமி பாஸ்கரன் - சென்னை

இரண்டாம் பரிசு - ரூ.1000/-
தோழர் சரவணன் - திருவண்ணாமலை

மூன்றாம் பரிசு - 500/-
செல்வன் மதுரம் ராஜ்குமார் - சேலம்

சிறப்பு பரிசு ரூ.250/-
தோழர் அய்யாறு புகழேந்தி
தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் குடந்தை

வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
ஜெகன் கலை இலக்கிய மன்றத்தின்
 வாழ்த்துகள்...

Friday, August 27, 2021

25.08.2021 - ஒருங்கிணைப்புக்குழு, நூல் திறனாய்வுக் கூட்ட அறிக்கை - படிக்க

Monday, June 21, 2021

 தி.ஜா நினைவலைகள்...

பதின் வயதுகளில் காதலிக்கிறமோ இல்லையோ மோகமுள் வாசித்து இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். தி.ஜாவின் எழுத்துக்கள் மிகவும் வசீகரம் ஆனவை. அவரது கதாநாயகிகளை அவர் நம் முன்னால் உருவாக்கி உலவ விடுவது இருக்கிறதே.. அது ஜகஜால வித்தை. அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரம் அம்மாளையும், இந்துவையும் உருவப்படியாகவே நான் அறிந்திருக்கிறேன். அம்மா வந்தாள் நாவலைப் படித்த தனிமை இரவில் … எனது முதுகிற்கு பின்னால் இந்துவின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது போன்ற உணர்வு. அதே போல மோகமுள்ளில் வரும் யமுனாவின் கம்பீரத்தை நான் பார்க்கிற எல்லா முதிர்ப் பெண்களிடமும் தேடி இருக்கிறேன். நீதானா அந்த யமுனா..???

 - மணி செந்தில்