Tuesday, July 14, 2020

முதல் காணொளிக் கூட்டம்

தோழர்களே!

    ஜெகன் கலை இலக்கிய மன்றத்தின் முதல் காணொளிக் கூட்டம் 12.07.2020 ஞாயிறு மாலை 06.30 மணி முதல் இரவு 08.20 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தை ZOOM செயலியின் வாயிலாக தோழர் விஜய் ஆரோக்கியராஜ் நெறிப்படுத்தி நடத்திவைத்தார்.

    கூட்டத்தில் தோழர் காமராஜ், தோழர் நடராஜன், தோழர் ஆர்கே , தோழர் ஜெயபால் , தோழர் நீலகண்டன் , தோழர் வல்லம் தாஜ்பால், தோழர் செம்மல் அமுதம் உள்ளிட்ட  40க்கும் அதிகமான முன்னணித் தோழர்கள் கலந்து  கொண்டனர்.

    தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் அவர்கள் தனது தலைமை உரையில் கூட்டத்தின் சிறப்பு பேச்சாளரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலர் முனைவர் தோழர் இரா.காமராசு அவர்களைப் பற்றியும் அவரது இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

    தோழர் வல்லம் தாஜ்பால் துவக்கவுரையாற்றினார்.

கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளர் தோழர் இரா.காமராசு அவர்கள் கலையும் இலக்கியமும் இதுநாள் வரை என்ன செய்தது? என்ன செய்யப்போகிறது என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார். பேசச் சொல்லி தலைப்பு  கொடுப்பதில்  நமது தோழர்களுக்கு நிகரில்லை என்றார். தனது உரையில் தோழர் ஜெகனுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கோசம் போடுவதை எங்களுக்கு தோழர் ஜெகன் தான் கற்றுக் கொடுத்தார் என தோழர் ஜெகனை நினைவு கூர்ந்தார். தோழமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தொலைத்தொடர்பு தோழர்கள் இருக்கிறார்கள் என நமது தோழர்களின் செயல்பாட்டை நினைவு கூர்ந்தார்.

 மேலும் தனது உரையில் கலையும் இலக்கியமும் தான் நாம் இன்றைக்கு சமுகத்தில் நமக்கான இடத்தை தந்தது அவைதான் எல்லவற்றையும் தந்தது என்றார். கலையும் இலக்கியமும் தான் பாமரனை ஆதிக்க சாதிக்கெதிராக போராட வைத்தது இனியும் தொடர்ந்து போராட வைக்கும் என்றார். பொதுவுடமை மற்றும் திராவிட, தலித்திய இயக்கங்களின் ஆயுதமாக கலையும் இலக்கியமும் தான் உள்ளது என்றார்.

 மேலும் பேசுகையில் ஆரம்பத்தில் இலக்கியம் காதலையும், வீரத்தையும், பக்தியையும் மட்டுமே பேசியது என்றும் காலப் போக்கில் அதன் பேசுபொருள் எல்லாமுமாக மாறியதைக் குறித்தும் விவரித்தார்.

 இறுதியாக தனது உரையில் கலையும் இலக்கியமும் சமுதாய கொடுமைகளுக்கெதிராக போராடும் நம்மைப் போன்ற இடதுசாரிகளின் ஆயுதம் எனவே அதனை தொடர்ந்து கூர் தீட்டிக் கொண்டே இருப்பது அவசியம் என்றார். மேலும் ஜெகன் கலை இலக்கிய மன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான பணிகளை தோழர்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கூறி வாழ்த்துக்களுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

     பின்பு தோழர்கள் காணொளி கூட்டம் பற்றிய தங்களது அனுபங்களை  பகிர்ந்து கொண்டனர்.

   இறுதியாக நெறியாளர் தோழர் விஜய் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஜெகன் கலை இலக்கிய மன்றம் சார்பாக மின்னிதழ் ஒன்றை துவக்கவிருப்பதாகவும் அதற்கு ஜெகம், இலச்சினை போன்ற பெயர்களை தோழர்கள் முன்மொழிந்துள்ளனர் எனவும் மேலும் தோழர்கள் மின்னிதழுக்கான பெயர் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

தோழர்களே...

கலை இலக்கிய அமைப்பு ஒன்றினை துவக்கிட வேண்டும் என்ற நமது நெடுநாள் கனவு இன்று நம் கண் முன்னே நிஜமாகியுள்ளது. அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கும், முயற்சிகளுக்கும் தோழர்கள் தங்களது தோழர் பங்களிப்பை தந்திட வேண்டுமென தோழர்களை கேட்டுக் கொள்கிறோம்.

 நன்றி

இப்படிக்கு

தோழமையுள்ள

 

M.விஜய் ஆரோக்கியராஜ்

மாநில ஒருங்கிணைப்பாளர்

ஜெகன் கலை இலக்கிய மன்றம்

 


No comments:

Post a Comment