Monday, August 31, 2020

 


மோகமுள் ....

தன்னைவிட பத்து வயது மூத்த யமுனாவிடம்  பாபுவுக்கு மோகம். 

யமுனா....

ஒளிரும் நிறம். 

அலையாக வந்து இழுக்கும் கண்கள். உயர்த்த உருவம். 

அழகியபாதம். 

அடிக்கடி அதைவணங்கத்தோன்றும் பாபுவுக்கு. 

பூகம்பமே  வந்தாலும் பூத்தொடுக்கும் நிதானம் யமுனா. 

கடுமையான வார்த்தைகள் பேசாத கற்பகவிருட்சம். 

பாபுவின் ப்ரோபோசலை அமைதியாக மறுக்கிறாள்.. ஸ்நேகிதம் மாறாமல்... 

எட்டுவருடம்.. 

சங்கீதத்தில் மூழ்கி பிழைப்புக்கு சென்னையில் ஒரு இன்சூரன்ஸ் அலுவலகத்தில் வேலைசெய்யும் பாபுவிடம் உங்களை ஒருவயதான அம்மாபார்க்க வந்திருப்பதாக ஊழியர் கூற..

வந்தது யமுனா. 

வறுமையிலும் பசியிலும் வாடி வயதுகூட ஏறியிருக்கும் யமுனாவுக்கு. 

அவளுக்கு வேலை, தங்குமிடம் அமைத்துகொடுப்பான் பாபு. 

ஒருநாள் அலைகள் ஊரும் கடற்கரையில்  பாபு சொல்லுவான்: 

நான் இன்னும் மாறவில்லை. எனக்கு நீ வேண்டும் யமுனா. 

ஆகட்டும் எடுத்துககொள்.. இது யமுனா. 

அடுத்தடுத்தநாட்களில் ... ஓர் இரவு 

ஜுரமாக படுத்திருக்கும் பாபுவின் நெற்றியில் யமுனா கைவைக்க.. 

பாபுவுக்கு அடுத்தவிநாடியே காய்ச்சல் நிற்க.... 

காலையில் பாபுவை கேட்கிறாள் யமுனா:

இதற்குத்தானா ? 

நிதானம் அமைதி நேர்மை சமயோசிதம் நற்பண்பு.. 

யமுனா என்ற தென்றல் வரிசையாக பக்கங்களை தானே புரட்டிக்கொடுத்தது. 

யூ டியூப்பில் when u marry an elder girl  என்று ஒரு வீடியோ பார்த்தேன். 

கணவனை "டேய் ஒழுங்கா குளி,  சாப்பிடு, பேன் ஆப் பண்ணு"   என்று அழகாக அம்மாவைப்போல காதலுடன் விரட்டிக்கொண்டே இருப்பாள் அந்த பெண். 

பார்கப்பார்க்க கவிதையாக இருந்தது. 

யமுனாவும் அப்படித்தான். 

என்னை ஆளாக்கியது  யமுனாதான் என்பான் பாபு. 

வேறுபாத்திரங்கள் சம்பவங்கள் நிறையவந்தாலும் தொடக்க முதல் கடைசிவரை நீக்கமற நிறைந்திருப்பது யமுனாதான்

No comments:

Post a Comment